தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் த்ரிஷா. இருபது வருடங்களாக திரையுலகில் தன்னை கதாநாயகியாக தக்கவைத்துக் கொண்டு இன்றும் ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக வளம் வருகிறார். மாடலிங் துறையில் பிரபலமாக இருந்து பின்னர் சினிமா துறையில் கால் பதித்த த்ரிஷா தமிழ் சினிமாவில் என்றும் இளமையாக காணப்படும் நடிகையாகவே கொண்டாடப்பட்டு வருகிறார் .சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன்1, பொன்னியின் செல்வன் 2, லியோ படங்களில் நடித்து பெரிய அளவில் ஹிட் கொடுத்து வசூலையும் வாரி குவிக்க வைத்தது அந்த படங்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Trisha Krishnan (@actress_trisha_krishnan_)

கடைசியாக அஜித்தின் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களில் நடித்துள்ளார். தற்போது 41 வயதை கடந்தும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாகவே இருந்து வருகிறார். இதற்கிடையில் சில தினங்களுக்கு முன்பு நடிகை திரிஷா பட்டு புடவையில் பூ வைத்துக்கொண்டு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு “காதல் எப்போதும் வெல்லும்” என்று குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவால் திரிஷாவிற்கு திருமண நிச்சயம்  முடிந்து விட்டதா? என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்நிலையில் தற்போது திரிஷா கழுத்தில் தாலியுடன் மணப்பெண் கோலத்தில்  வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது. இந்த புகைப்படத்துக்கு திருமண வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றது. ஆனால் உண்மை என்ன என்பது தெரியவில்லை.