தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நாளை (சனிக்கிழமை, ஜனவரி 24) ரேஷன் கார்டு குறைதீர் முகாம்கள் நடைபெற உள்ளன. வழக்கமாக ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை நடைபெற வேண்டிய இந்த முகாம், இந்த முறை பொங்கல் விடுமுறை வந்த காரணத்தால் நாளைக்கு மாற்றப்பட்டுள்ளது. உங்கள் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், முகவரி மாற்றம், செல்போன் எண் திருத்தம் அல்லது புதிய கார்டு தொடர்பான புகார்கள் என எதுவாக இருந்தாலும் இந்த முகாமில் நேரடியாக மனு கொடுத்து உடனடியாகத் தீர்வு காணலாம்.
ஆன்லைன்ல அப்ளை பண்ணத் தெரியாதவங்க அல்லது அலைஞ்சு அலைஞ்சு டயர்டானவங்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். இந்த முகாமிற்குச் செல்லும்போது உங்களது ஆதார் கார்டு, பழைய ரேஷன் கார்டு மற்றும் மாற்றங்களுக்குத் தேவையான முறையான ஆவணங்களைக் கையோடு எடுத்துச் செல்வது அவசியம்.
