சென்னையில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், தமிழக ஆளுநருக்கு எதிராக மிக முக்கியமான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை தொடங்குவது தொடர்பான குளறுபடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் சுட்டிக்காட்டிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றி அரசியல் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதற்காக ஒத்த கருத்துடைய மற்ற மாநிலக் கட்சிகளுடன் இணைந்து குரல் கொடுக்கவும் மதிமுக முடிவு செய்துள்ளது.

​இவை அனைத்திற்கும் மேலாக, மாநில சுயாட்சிக்குத் தடையாக இருக்கும் “ஆளுநர் பதவியையே மொத்தமாக ரத்து செய்ய வேண்டும்” என்று மதிமுக தீர்மானம் நிறைவேற்றியிருப்பது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு ஆளுநர் முட்டுக்கட்டை போடுவதைத் தவிர்க்க, இந்த பதவியே வேண்டாம் என்பதே வைகோ தலைமையிலான மதிமுக-வின் உறுதியான நிலைப்பாடாக இருக்கிறது. தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஆளுநர் Vs மாநில அரசு என்ற மோதல் போக்குக்கு மதிமுக கொடுத்துள்ள இந்த ‘எண்ட் கார்டு’ மூவ் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.