அமெரிக்க நாட்டில் நியூயார்க் மாகாணத்தில் உள்ள ஒரு விடுதியில் பிரபல இளம் நடிகரான ஜென்சன் பனெட்டீரின் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இவர் பிரபல நடிகை ஹெய்டன் பனெட்டீரினின் சகோதரர் ஆவார். ஜென்சன் பனெட்டீரின் மரணத்தை பற்றி அவரது தங்கையின் பிரதிநிதி ஒருவர் சி.என்.என்.க்கு தகவல் அளித்துள்ளார்.

இந்த தகவலின் பேரில் ஆரஞ்சு டவுன் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அங்கு ஜென்சன் நாற்காலியில் உட்கார்ந்த நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார். 28 வயதான இளம் நடிகர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஜென்சன் பனெட்டீரின் தி வாக்கிங் டெட் மற்றும் ஐஸ் ஏஜ் தி மேல்ட்டவுன் உள்ளிட்ட தொடர்களில் நடித்து பிரபலம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.