இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர்களுக்கு இடையில் நீண்ட காலமாக மோதல் நிலவி வருகின்றது. இதனால் இருதரப்பு படைகளும் அதிக அடிக்கடி மோதிக் கொள்வது வழக்கம். இந்த நிலையில் இஸ்ரேல் படை திடீரென திடீரென மேற்கு கரை பகுதியில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் மற்றும் அந்நாட்டில் பாதுகாப்பு கழகம் இணைந்து கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் கூறி இருப்பதாவது “இஸ்ரேல் மீது சந்தேகத்திற்குரிய மூன்று நபர்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தனர். அவர்கள் மூன்று பேரும் நவாஸ் பகுதியில் வைத்து சுட்டு கொள்ளப்பட்டுள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சி.என்.என் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது “இஸ்ரேல் படைகளுடனான மோதலில் எங்களுடைய இரண்டு தளபதிகள் கொல்லப்பட்டனர் என இஸ்லாமிய ஜிகாத் பயங்கரவாத குழு தெரிவித்துள்ளது.

இந்த மோதலில் லயன்ஸ் டென் என்ற பயங்கரவாத குழுவைச் சேர்ந்த உறுப்பினர்களும் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இஸ்ரேல் படைகளால் கொல்லப்பட்ட நபர்கள் பெரிய கற்கள் மற்றும் மதுபான பாட்டில்களை வீசியும், வெடிபொருட்களை வெடிக்கச் செய்தும் உள்ளனர். இதனாலேயே இஸ்ரேலிய படைகள் அவர்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த மோதலில் 11 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 102 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.