இன்றைய காலகட்டத்தில் தினம்தோறும் புதுவிதமான வீடியோக்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. அதில் சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும் வகையிலும் இருக்கும். குறிப்பாக செல்லப் பிராணிகள் மற்றும் விலங்குகள் குறித்த வீடியோக்கள் அதிக அளவு இணையத்தில் பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

அதன்படி தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் நாயும் குரங்கும் ஒன்றுடன் ஒன்று சண்டை போட தயாராக இருக்கிறது. முதலில் குரங்கும் நாயும் ஒன்றை ஒன்று பார்த்துக்கொண்டு பிறகு சண்டையிட தொடங்குகின்றது. குரங்கு நாயின் மீது பாய்ந்து அதன் கழுத்தை பிடிக்கும் நிலையில் குரங்கின் பிடியிலிருந்து நாய் தன்னை விடுவித்துக் கொள்ள முயற்சிக்கிறது. பிறகு இரண்டும் மாறி மாறி சண்டையிட்டுக் கொள்ளும் நிலையில் தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.