நாமக்கல்லில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை மர்ம நபர் ஒருவர் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் அழுகுரல் கேட்டு விரைந்த அக்கம்பக்கத்தினர், அந்த சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில், இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட கட்டட தொழிலாளி தனது வீட்டிற்குள் சென்று பதுங்கிக் கொண்டார். ஆத்திரமடைந்த ஊர் பொதுமக்கள் அந்த வீட்டை முற்றுகையிட்டு, உள்ளே மறைந்திருந்த கொடூரனை இழுத்து வந்து சரமாரியாகத் தர்ம அடி கொடுத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பொதுமக்களிடம் இருந்து அந்த நபரை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில் அவர் கட்டட வேலை செய்து வரும் ஒரு நபர் என்பது தெரியவந்தது. தற்போது அவர் மீது போக்சோ (POCSO) சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். பிஞ்சுக் குழந்தையிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட நபரை பொதுமக்கள் கையாண்ட விதம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
