பிறந்த குழந்தை ஒன்று மருத்துவரின் கையுறையை விடாமல் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டிருக்கும் அழகான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் மட்டும் 28 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்றுள்ள இந்த வீடியோவில், பிறந்த சில நிமிடங்களே ஆன அந்தப் பிஞ்சு குழந்தை மருத்துவர் இஸ்லாம் எல்டேவின் கையை விடாமல் பிடித்துள்ளது.
மருத்துவர் லேசாகக் கிச்சுகிச்சு மூட்டிப் பார்த்தும், அந்தக் குழந்தை கையை விடாமல் அழத் தொடங்கியது காண்போரை நெகிழச் செய்துள்ளது. இந்த வீடியோவைக் கண்டு ரசித்த இணையவாசிகள் பலவிதமான கமெண்டுகளைப் பகிர்ந்து வருகின்றனர். “இந்தக் குழந்தைக்கு இன்னும் ‘சிரிக்கும் அம்சம்’ டவுன்லோட் ஆகவில்லை போலிருக்கிறது” என்று ஒருவர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார்.
“இந்தக் குழந்தையின் பிடி, இன்றைய உறவுகளை விட வலுவாக இருக்கிறது” என்று மற்றொருவர் பதிவிட்டுள்ளார். இதே வேளையில், விண்வெளியில் ஒரு வால்நட்சத்திரம் உடைந்து சிதறும் அரிய காட்சியை விஞ்ஞானிகள் நேரலையாகப் பகிர்ந்து, அது மிகவும் சிறப்பு வாய்ந்தது என்றும் தெரிவித்துள்ளனர்.
