உறவுகளின் புனிதத்தை கெடுக்கும் ஒரு அதிர்ச்சிச் சம்பவம் பிபிகஞ்ச் பகுதியில் நடந்துள்ளது. 35 வயது பெண் ஒருவர், தனது 15 வயது மருமகனுடன் (தாய்வழி அத்தை – மருமகன் உறவு) வீட்டை விட்டு வெளியேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 26-ம் தேதி காணாமல் போன இவர்களைக் குறித்து குடும்பத்தினர் ரகசியமாகத் தேடி வந்தனர்.
இறுதியில் போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், செல்போன் சிக்னல் மற்றும் சிசிடிவி காட்சிகளை வைத்து இருவரையும் போலீசார் பிடித்துள்ளனர். அத்தையின் கணவர் வெளிநாட்டில் இருக்கும் சமயம் பார்த்து, இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக நெருக்கமாகப் பேசி வந்ததும், ஒன்றாக வாழ முடிவு செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
போலீசார் இவர்களைப் பிடித்தபோது, இருவரும் திருமணம் செய்து கொள்ளத் தயாராக இருந்தது குடும்பத்தினரை நிலைகுலைந்து போகச் செய்துள்ளது. பிடிபட்ட பிறகும் அந்தப் பெண் அந்தச் சிறுவனுடன் தான் வாழ்வேன் எனப் பிடிவாதமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட சிறுவன் 9-ம் வகுப்பு படிக்கும் 15 வயதுடையவர் என்பதால், இது ஒரு சிறார் தொடர்பான வழக்காகக் கருதப்படுகிறது. சட்டப்படி சிறுவனுக்கு மருத்துவப் பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன. இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.
