சோழிங்கநல்லூர் தேர்தல் பிரசாரத்தில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமியின் விமர்சனங்களுக்கு மிகக் காரசாரமான பதிலடி கொடுத்துள்ளார். தனக்கு அனுபவம் இல்லை என ஈபிஎஸ் கூறுவது உண்மைதான் என்று குறிப்பிட்ட அவர், பதவிக்காக யார் காலிலும் விழுந்த அனுபவமோ அல்லது சங்கிக் கூட்டத்தைக் கண்டு பயந்து நடுங்கும் அனுபவமோ தனக்கு ஒருபோதும் கிடையாது எனத் தாக்கிப் பேசினார்.

​தன்னைப் பார்த்து “செத்துப் போ” என ஈபிஎஸ் சொல்வதாகவும், அவரது உயிரைத் தான் வாங்குவதாக அவர் புலம்புவதாகவும் உதயநிதி சிரித்துக்கொண்டே தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமியின் விரக்தியே இத்தகைய பேச்சுகளுக்குக் காரணம் என்று சாடிய அவர், அதிமுக மற்றும் பாஜக கூட்டணியைத் தமிழக மக்கள் இந்தத் தேர்தலில் அடியோடு நிராகரிப்பார்கள் என்றும் மிகத் தைரியமாகத் தனது பிரசாரத்தில் முழங்கியுள்ளார்.