தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் ‘மக்களை காப்போம்… தமிழகத்தை மீட்போம்…’ என்ற தலைப்பில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், “அதிமுக கூட்டணி வரவிருக்கும் தேர்தலில் 210 தொகுதிகளில் வெற்றிபெற்று, அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்,” என உறுதியாகத் தெரிவித்தார். தொடர்ந்து, “அதிமுகவை பாஜக விழுங்கிக் கொண்டிருப்பதாக சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்… ஆனால், நான் பாஜகவால் விழுங்கப்படும் புழு அல்ல!” எனக் கடும் பதிலடி கொடுத்தார்.

மேலும், “முதல்வர் ஸ்டாலின்தான் பல கட்சிகளை விழுங்கிக் கொண்டிருக்கிறார். அவை கொஞ்ச நாளில் காணாமல் போய்விடும். கம்யூனிஸ்ட் கட்சிகள் எங்கே இருக்கின்றன என்பதே தெரியவில்லை. விசிக கட்சி ஏதேதோ காரணம் சொல்லிக் கொண்டு திமுகவுடன் ஒட்டிக்கொண்டு இருப்பது போல நடிக்கிறது,” என கூட்டணி தரப்புகளை குறிவைத்து விமர்சித்தார்