தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026 முடிவுகளுக்குப் பிறகு, தமிழ்நாட்டில் புதிய ஆட்சி அமைப்பதற்கான அரசியல் களம் நிமிடத்திற்கு நிமிடம் சூடேறி வரும் நிலையில், விழுப்புரம்  சி.வி. சண்முகத்திடம் செய்தியாளர்கள், “தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க அதிமுக ஆதரவு அளிக்குமா?” என்று சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினர்.

அதற்குத் தனது வழக்கமான அதிரடி பாணியில் பதிலளித்த சி.வி. சண்முகம், “தவெக-வுக்கு ஆதரவு அளிப்பது குறித்து நான் தனிப்பட்ட முறையில் எதுவும் கூற முடியாது; இது போன்ற முக்கிய அரசியல் முடிவுகளை அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கட்சியின் தலைமை மட்டுமே விவாதித்து முறைப்படி முடிவு செய்யும்” என்று கூறி நழுவினார். தவெக-வுக்கு ஆதரவு இல்லை என ஓ.எஸ்.மணியன் ஒருபுறம் கறாராகப் பேசி வரும் நிலையில், சி.வி. சண்முகம் ‘கட்சியே முடிவு செய்யும்’ என நெகிழ்வுத்தன்மையோடு நழுவியுள்ளது கோட்டை அதிகாரப் போட்டியில் புதிய சஸ்பென்ஸை ஏற்படுத்தியுள்ளது.

“>