ராஜஸ்தான் அல்வார் மாவட்டத்தில் மீரட் கொலைக்கே ஒத்த சம்பவம் ஒன்று மீண்டும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களாக கிஷன்கர் பாஸில் மனைவி சுனிதா மற்றும் மூன்று குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்த உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த ஹன்ஸ்ராம் (வயது சுமார் 40) மர்மமாக கொலை செய்யப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 17 (ஞாயிற்றுக்கிழமை) அன்று வீட்டின் கூரையில் வைக்கப்பட்டிருந்த நீல நிற டிரம்மில் துர்நாற்றம் வீசுவதை அக்கம்பக்கத்தினர் கவனித்து, அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் அங்கு சென்று திறந்தபோது, உப்புடன் மூடப்பட்ட நிலையில் ஹன்ஸ்ராமின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அவரது உடலில் கூர்மையான ஆயுதத்தால் ஏற்பட்ட பல காயங்கள் இருந்தது உறுதி செய்யப்பட்டது.
🧵 Rajasthan’s Blue Drum Horror vs Meerut’s Drum Murder – A Tale of Two Chilling Crimes
🔹 Tweet 1/2 (200 words)
🛑 Rajasthan has been shaken by a spine-chilling discovery, echoing the infamous Meerut case, and the details are disturbing 👇
🏠 In Khairthal-Tijara, Alwar, police… pic.twitter.com/Q38CrDof8l— Satyaagrah (@satyaagrahindia) August 18, 2025
“>
விசாரணையில், ஹன்ஸ்ராம் உள்ளூர் செங்கல் சூளையில் வேலை செய்தது வந்ததும் , தொடர்ந்து மது அருந்தியதும், அத்துடன் வீட்டுஉரிமையாளரின் மகன் ஜிதேந்திராவுடன் அடிக்கடி மது அருந்தியதும் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, ஹன்ஸ்ராமின் மனைவி சுனிதா மற்றும் ஜிதேந்திரா இடையே நெருக்கம் அதிகரித்ததாகவும், கொலைக்குப் பின் இருவரும் சுனிதாவின் மூன்று குழந்தைகளுடன் வீட்டை விட்டு தப்பியோடியதாகவும் போலீசார் தெரிவித்தனர். சிதைவைத் தடுக்க சடலத்தின் மீது உப்பு தடவியதும், டிரம்மில் பூட்டி மாடியில் வைத்திருந்ததும் வெளிச்சத்திற்கு வந்தது.
ஆகஸ்ட் 18 (திங்கட்கிழமை) அன்று கைர்தல்-திஜாரா பகுதியில் சுனிதா மற்றும் ஜிதேந்திராவை போலீசார் கைது செய்தனர். தற்போது இருவரும் காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். சுனிதா சமூக ஊடகங்களில் தொடர்ந்து ரீல்கள் பதிவேற்றிக் கொண்டிருந்ததாகவும், சில வீடியோக்களில் தனது கணவருடனும் தோன்றியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜிதேந்திராவுடன் உள்ள உறவு இந்த கொலையில் நேரடி பங்குவகித்ததா என்ற கேள்வி எழுந்துள்ளது. கொலைக்கான காரணம், திட்டமிடப்பட்ட விதம் மற்றும் உடலை மறைத்த முறைகள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
