ஜெய்ப்பூரில் நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2025 போட்டியில், ஏராளமான போட்டியாளர்களை பின்தள்ளி ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மணிகா விஸ்வகர்மா பட்டத்தை கைப்பற்றினார். கடந்த ஆண்டு வெற்றியாளர் ரியா சிங்கா, மணிகாவுக்கு மகுடம் சூட்டினார். அதேசமயம், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த தன்யா சர்மா இரண்டாம் இடத்தையும், ஹரியானாவின் மேஹக் திங்க்ரா மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.
மிஸ் யுனிவர்ஸ் இந்தியா பட்டத்தை வென்ற மணிகா, இந்த ஆண்டு நவம்பர் மாதம் தாய்லாந்தில் நடைபெற உள்ள 74வது மிஸ் யுனிவர்ஸ் உலகப் போட்டியில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்த உள்ளார். உலக அரங்கில் இந்தியக் கொடியை உயர்த்தும் வாய்ப்பு கிடைத்துள்ளதால், மணிகாவின் வெற்றி ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
