உலகம் முழுவதும் 120க்கும் மேற்பட்ட நாடுகளை சுற்றிப் பார்த்த இந்திய வ்லாகர் ‘எக்ஸ்ப்ளோரர் ராஜா’ (Explorer Raja), தனது பயண அனுபவங்களில் ஜார்ஜியாவை மிக மோசமானது என தெரிவித்துள்ளார். சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில், ஜார்ஜியாவில் விமான நிலையத்தில் அடைந்த அவமானங்களை விளக்கியுள்ளார்.

“2019-ல் எனக்கு ஜார்ஜியா வந்த அனுமதிப் பத்திரம்(visa), ஹோட்டல் ரிசர்வேஷன், அடுத்த பயண டிக்கெட்டுகள் எல்லாமே இருந்தாலும், அவர்கள் என்னை நான்கு மணி நேரம் பரிசோதனை கொண்டே காக்க வைத்தார்கள். பாரிஸ் செல்ல டிக்கெட் இருக்கிறது என நம்பவே முடியாது என்று கூறி, அங்கே என் உடைகளை கழட்டிச் சோதனை செய்தார்கள்,” என கூறிய ராஜா, கடந்த ஆறு ஆண்டுகளுக்குப் பிறகும் அதே சோதனைகளை மீண்டும் எதிர்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கு மேலாக, ஜார்ஜியாவிலுள்ள மக்கள் கூட இனவெறிப் போக்குடன் நடந்துக்கொண்டதாக கூறிய ராஜா, “இந்தியர்கள் சுற்றுலா வந்திருக்க முடியாது என நேரில் கேட்டனர். இது மிகவும் மனவேதனை அளிக்கிறது,” என கூறியுள்ளார். அவரது வீடியோ வைரலாகி வருகின்ற நிலையில், பல நெட்டிசன்களும் ஜார்ஜியாவில் தாங்களும் இதே போன்ற அனுபவங்களை சந்தித்ததாக பகிர்ந்து வருகின்றனர். ஆனால், சில பயணிகள் ஜார்ஜியாவில் மிக நல்ல அனுபவம் இருந்தது என்றும், மக்களும் பரிதாபமாக நடந்து கொண்டதாகவும் பகிர்ந்துள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Explorer Raja (@expraja)

“>

இந்த வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்துக்குக் காரணமாகி இருக்கிறது. குறிப்பாக, இந்தியர்களுக்கு இவகை நாடுகளில் இன்னும் நிலவும் இனவெறி, குடியுரிமை அங்கீகாரத்தில் இரட்டைக் கொள்கை, மற்றும் பயண அனுபவங்களில் ஏற்படும் வேறுபாடுகள் குறித்து நெட்டிசன்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.