நாட்டையே உலுக்கிய ஒரு ஐபோனுக்காக 19 வயது இளைஞன் மலையில் இருந்து குதித்த நிலையில் அவனை காப்பாற்றிய தாய் தந்தை இருவருமே குவித்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் அடுத்தடுத்து புதிய தகவல்கள் வெளியாகி அதிர்வைத்து வருகிறது. அந்த வகையில் மகன் மலையில் இருந்து குதிப்பதைத் தடுக்க “நான் என் தாலியைத் தூக்கி எறிகிறேன், உன்னுடன் நானும் வருகிறேன்…” என்று கதறியழுத தாய் சங்கீதா சண்டகுடே தொடர்பான விசாரணையில் ஒரு திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிராவில் நடந்த இந்தச் சோகச் சம்பவம் குறித்துப் பல புதிய உண்மைகள் வெளிவந்துள்ளன.
அதாவது உயிரிழந்த சங்கீதா சண்டகுடே ஒரு யூடியூபர் என்பது தெரியவந்துள்ளது. அவர் தனது குடும்ப வாழ்க்கை, அன்றாட நிகழ்வுகள் மற்றும் தனது மன உணர்வுகளைத் தொடர்ந்து தனது யூடியூப் சேனலில் வீடியோக்களாகப் பகிர்ந்து வந்துள்ளார். இந்தத் துயரச் சம்பவம் நடப்பதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு, அவர் தனது சேனலில் மிகவும் உணர்ச்சிகரமான ஒரு வீடியோவைப் பதிவேற்றியுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாய் பரவி வருகிறது.
அந்த வைரல் வீடியோவில் உறவுகளில் ஏற்படும் கசப்புகள், உரிய மதிப்பு அளிக்கப்படாமை மற்றும் சுயமரியாதை குறித்து சங்கீதா வெளிப்படையாகப் பேசியுள்ளார். “எந்த உறவில் உங்கள் அன்புக்கு மதிப்பு இல்லையோ, அந்த உறவுக்கு எந்த அர்த்தமும் இல்லை” என்று அவர் கண்ணீருடன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஆரோக்கியமான மற்றும் உண்மையான உறவில் இரு தரப்பிலிருந்தும் அன்பும், ஒருவருக்கொருவர் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதும் மிகவும் அவசியம் என்றும், உறவுகளில் இந்த விஷயம் இல்லாமல் புழுங்கிச் சாவதை விட, அத்தகைய உறவிலிருந்து வெளியேறி விடுவதே சிறந்தது என்றும் அவர் அந்த வீடியோவில் பேசியுள்ளார். அவர் பேசிய இந்த வார்த்தைகள், அவரது குடும்பத்திற்குள் நீண்ட நாட்களாக ஏதேனும் கடுமையான மன உளைச்சலும் குடும்பத் தகராறும் இருந்திருக்கலாமோ என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
இருப்பினும், இந்த வீடியோவுக்கும் அந்தத் தற்கொலைச் சம்பவத்துக்கும் நேரடித் தொடர்பு உள்ளதா என்பதை இப்போது உறுதியாகக் கூற முடியாது என்று காவல்துறை மற்றும் விசாரணை அமைப்புகள் தெரிவித்துள்ளனர். சங்கீதாவின் யூடியூப் சேனல், சமூக வலைதளப் பக்கங்கள் மற்றும் குடும்பத்தினரின் தொலைபேசி அழைப்புப் பதிவுகள் ஆகியவற்றைக் காவல்துறையினர் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். இந்த விசாரணையின் முடிவில்தான் இந்த உணர்ச்சிகரமான வீடியோவுக்குப் பின்னால் இருக்கும் உண்மையான காரணம் வெளிவரும்.
