” மனுஷங்களா.. 17 வருஷமா உசேன் போல்ட் வச்சிருந்த உலக சாதனையை முறியடிக்க உங்களால முடியலதானே, இப்போ நாங்க உருவாக்குன இந்த ரோபோ எப்படி அசால்ட்டா ஓடி ஜெயிக்குதுன்னு பாருங்க!” என்று சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஹானர் (Honor), தாங்கள் உருவாக்கிய ‘லைட்னிங்’ (Lightning) என்ற ஹியூமனாய்டு மனித உருவ ரோபோ, உலகின் அதிவேக மனிதரான உசேன் போல்ட்டின் 100 மீட்டர் வரலாற்றுச் சாதனையைத் தகர்த்தெறிந்ததை உலகிற்குப் பெருமையுடன் பறைசாற்றியுள்ளது.
கடந்த 2009-ஆம் ஆண்டு பெர்லின் உலக தடகள போட்டியில் 100 மீட்டர் தூரத்தை உசேன் போல்ட் 9.58 வினாடிகளில் கடந்து உலக சாதனை படைத்திருந்த நிலையில், ஆகஸ்ட் 22 சனிக்கிழமையன்று சீனா நடத்திய சோதனையில், ‘லைட்னிங்’ ரோபோ வினாடிக்கு 14.5 மீட்டர் வேகத்தில் பாய்ந்து சென்று வெறும் 9.32 வினாடிகளிலேயே 100 மீட்டரைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
बीजिंग : वर्ल्ड ह्यूमनॉइड रोबोट गेम्स में तियांगोंग अल्ट्रा नाम के एक रोबोट ने 100 मीटर की दौड़ सिर्फ 9.39 सेकंड में पूरी की
◆ रोबोट का ये समय उसैन बोल्ट के 9.58 सेकंड के वर्ल्ड रिकॉर्ड से भी तेज था
◆ वीडियो सोशल मीडिया पर हुआ वायरल#Beijing | China Robot | #China | China pic.twitter.com/QriHWx2oQL
— News24 (@news24tvchannel) August 23, 2026
“>
மனிதர்களின் தடகள உலக சாதனையாக இது அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படாது என்றாலும், ரோபோவின் ஓடும் திறனை அதிகரிக்க அதன் கால்களை 1.05 மீட்டராக நீட்டி சீனா செய்த இந்த தொழில் நுட்பப் புரட்சி, 1997-ல் செஸ் சாம்பியன் கேஸ்பரோவை ‘டீப் ப்ளூ’ கணினி வீழ்த்தியதை விடப் பெரிய மனித-இயந்திரப் போட்டியாகப் பார்க்கப்பட்டு உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
