யாருக்கேனும் உதவுவதற்குப் பெரிய அளவில் எதையோ செய்ய வேண்டும் என்பதில்லை; பல சமயங்களில் சாலையில் சற்று நின்று, துயரத்தில் இருப்பவரிடம் சென்று, இரண்டு நிமிடங்களுக்கு அவர்களின் பாரத்தை  குறைப்பதே பெரிய உதவியாக மாறும். அந்த வகையில் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ காண்போரின் இதயங்களை நெகிழச் செய்துள்ளது.

அந்த வீடியோவில், ஒரு முதியவர் தனது தள்ளுவண்டியில் அளவுக்கு அதிகமான பொருட்களை ஏற்றிச் செல்ல சிரமப்படுகிறார். வயது முதிர்வு மற்றும் அதிகப்படியான சுமை காரணமாக அவரால் வண்டியை நகர்த்த முடியவில்லை; தொடர்ந்து தள்ளுவண்டியைச் சமாளித்து அவர் முன்னேற முயல்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by India News (@indianewspage)

அப்போது அந்த வழியே வந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) வீரர் ஒருவர் இதைக் கவனித்தார். மற்றவர்களைப் போலப் பார்த்துவிட்டுச் செல்லாமல், உடனடியாக அந்த முதியவரின் அருகில் சென்றார். எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல், பின்னால் இருந்து தள்ளுவண்டியைத் தனது முழு பலத்துடன் தள்ளத் தொடங்கினார். முன்னால் முதியவர் வண்டியை இழுக்க, பின்னால் அந்த வீரர் தன் தோள் கொடுத்து உதவினார்.

இந்த உதவியைச் செய்யும்போது அவர் யாரிடமும் கைதட்டல் வாங்கவோ அல்லது கேமராவைப் பார்த்து போஸ் கொடுக்கவோ இல்லை. தேவைப்படும் இடத்தில் மனிதாபிமானத்துடன் உதவ வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் மட்டுமே அங்கே வெளிப்பட்டது. நாட்டின் எல்லைகளைக் காக்கும் துப்பாக்கியும், பாதுகாப்பும் மட்டுமே காவல்துறையினரின் அடையாளம் அல்ல; இதுபோன்ற இக்கட்டான தருணங்களில் ஒரு எளிய மனிதனாக மாறி முதியவருக்குத் தூணாக நிற்பதே உண்மையான வலிமை என்பதை இந்த வீரர் நிரூபித்துள்ளார். அந்த முதியவரின் சோர்வைப் போக்கிய இந்தச் சிறிய உதவி, நம்மில் பலருக்கு மனிதநேயம் இன்னும் உயிரோடுதான் இருக்கிறது என்ற அழகிய பாடத்தைக் கற்றுக்கொடுக்கிறது.