இந்தியாவிலுள்ள தனியார் துறை மற்றும் பொதுத் துறை வங்கிகளில் பொதுவாக ரிசர்வ் வங்கி அட்டவணைப்படி விடுமுறை விடப்படும். வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகள், திருவிழாக்கள், மாதந்தோறும் 2-வது, 4-வது சனிக்கிழமைகள் மற்றும் தேசிய விடுமுறை நாட்களில் வங்கி விடுமுறை இருக்கும். அதோடு இந்த விடுமுறையானது மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும். இந்த நிலையில் பொதுவாக மாதந்தோறும் 3 சனிக்கிழமைகள் இருக்கும். எனினும் ஏப்ரல் மாதம் 5 சனிக்கிழமைகள் உள்ளதால் 5-வது சனிக்கிழமையன்று இந்தியாவில் வங்கிகள் மூடப்படுகிறதா (அ) திறக்கப்படுகிறதா என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் RBI வெளியிட்ட அறிவிப்பின் படி பொது, தனியார், வெளிநாட்டு, கூட்டுறவு, பிராந்திய கிராமப்புற மற்றும் உள்ளூர் பகுதி வங்கிகளில் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகள் தவிர்த்து மற்ற சனிக்கிழமைகளில் வேலை நாளாக இருக்கும். அந்த வகையில் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகள் மட்டுமே விடுமுறை என்றும் 3-வது மற்றும் 5-வது சனிக்கிழமை வேலை நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு மாதத்தின் 5-வது சனிக்கிழமை பொது விடுமுறை (அ) தேசிய விடுமுறை இல்லை எனில் வங்கிகள் திறந்திருக்கும் என்பதால் ஏப்ரல் 29ம் தேதி முழு வேலைநாள் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.