பெங்களூரிலுள்ள வீட்டு உரிமையாளர் ஒருவர், வாடகைதாரருக்கு வீடு இல்லை என கூறிய நிகழ்வு இப்போது வைரலாக பரவி வருகிறது. வீட்டு புரோக்கர் ஒருவரிடம் வாடகைதாரர் பேசிய வாட்ஸ்அப் சாட் வெளியாகி இருக்கிறது.

அதாவது, வேலைக்கு ஆள்தேர்வு செய்வது போன்று நீங்கள் வேலை செய்யும் அலுவலகத்தின் சான்றிதழ், 10, 12 வது மார்ச் ஷீட், ஆதார், பான் கார்டு நகல் மற்றும் 150 முதல் 200 வார்த்தைகளுக்குள் தன்னை குறித்த ஒரு விரிவாக்கம் எழுதி தருமாறு கேட்டுள்ளார்.

நீங்கள் 75% மதிப்பெண் பெற்றதால் உங்களுக்கு வீடு கிடையாது என வீட்டு புரோக்கர் தெரிவித்து உள்ளார். இதை பகிர்ந்த வாடகைதாரரின் உறவினர், மதிப்பெண் உங்களது எதிர்கால வாழ்க்கையை நிர்ணயிக்காது கூறினார். இப்பதிவு இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி இருக்கிறது.