ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையைத் தனது நாட்டில் நடத்தத் துடித்த பாகிஸ்தானுக்கு, ஈரான் தற்போது மிகப்பெரிய இராஜதந்திர அதிர்ச்சியை அளித்துள்ளது.

ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் ஆகியோர் பேச்சுவார்த்தைக்காக ஏற்கனவே இஸ்லாமாபாத் வந்துவிட்டதாகச் சர்வதேச ஊடகங்கள் பரப்பிய செய்திகள் அனைத்தும் அப்பட்டமான பொய் என ஈரான் அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளது.

லெபனான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களை நிறுத்தும் வரை அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் கிடையாது எனத் தெஹ்ரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதன் மூலம், உலக அரங்கில் தன்னை ஒரு பெரிய மத்தியஸ்தராகக் காட்டிக்கொள்ள முயன்ற பாகிஸ்தானின் முயற்சி படுதோல்வியடைந்துள்ளதுடன், அந்நாடு சர்வதேச அளவில் கடும் அவமானத்தைச் சந்தித்துள்ளது.

“>

மறுபுறம், பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடாக அறியப்படும் பாகிஸ்தான், இத்தகைய அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுப்பது நகைப்புக்குரியது எனப் பல நாடுகள் விமர்சித்து வருகின்றன. குறிப்பாக, இந்தியாவின் பஹல்கா பகுதியில் சமீபத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானின் சதி அம்பலமான நிலையில், அமைதிப் புறாவாக மாறத் துடிக்கும் அதன் இரட்டை வேடத்தை ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளுமே விரும்பவில்லை என்பது தற்போது வெட்டவெளிச்சமாகியுள்ளது.

அமெரிக்காவின் அழுத்தத்திற்காக இந்தச் சந்திப்பிற்குப் பாகிஸ்தான் ஏற்பாடு செய்திருந்தாலும், ஈரானின் திடீர் “நோ” சொல்லால் இஸ்லாமாபாத் இராஜதந்திர ரீதியாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தைக்கான கதவுகளை ஈரான் மூடியுள்ளதால், பாகிஸ்தான் எதிர்பார்த்த அரசியல் லாபம் தற்போது கைகூடாமல் போனது அந்நாட்டிற்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.