ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் நிறுத்தத்தை ஏற்படுத்த பாகிஸ்தான் தீவிரம் காட்டி வரும் வேளையில், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் சர்ச்சை பேச்சு சர்வதேச அரங்கில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
இஸ்ரேலை ஒரு “புற்றுநோய்” என்று வர்ணித்த பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிம், அந்த நாட்டை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் முழங்கியுள்ளார். மேலும், இந்தியாவையும் இஸ்ரேலையும் பாகிஸ்தானின் பரம எதிரிகள் என அவர் குறிப்பிட்டது எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல் அமைந்துள்ளது.
பாகிஸ்தானின் இந்த அப்பட்டமான யூத-விரோத போக்கிற்கு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது இஸ்ரேலின் இருப்பிற்கே விடுக்கப்பட்ட நேரடி மிரட்டல் என்றும், அழித்தொழிப்பு போன்ற வார்த்தைகளை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும் இஸ்ரேல் ஆக்ரோஷமாக பதிலடி கொடுத்துள்ளது.
The Prime Minister’s Office:
Pakistan Defence Minister’s call for Israel’s annihilation is outrageous. This is not a statement that can be tolerated from any government, especially not from one that claims to be a neutral arbiter for peace.
— Prime Minister of Israel (@IsraeliPM) April 9, 2026
“>
நாளை சனிக்கிழமை இஸ்லாமாபாத்தில் ஈரான்-அமெரிக்கா இடையே முக்கிய சமாதானப் பேச்சுவார்த்தை தொடங்க உள்ள நிலையில், பாகிஸ்தானின் இந்த ஒருதலைப்பட்சமான நிலைப்பாடு அதன் மத்தியஸ்தர் தகுதியையே கேள்விக்குறியாக்கியுள்ளது.
ஈரானைத் திருப்திப்படுத்துவதற்காகவே பாகிஸ்தான் இத்தகைய அருவருப்பான அறிக்கையை வெளியிட்டுள்ளதாக இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் கிடியான் ஸார் குற்றம் சாட்டியுள்ளார். அமைதியை ஏற்படுத்துவதாகக் கூறிக்கொண்டு ஒரு நாட்டின் அழிவுக்கு அழைப்பு விடுக்கும் பாகிஸ்தானை எப்படி நம்புவது என உலக நாடுகள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளன.
ஒருபுறம் பேச்சுவார்த்தைக்காக இஸ்லாமாபாத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில், மறுபுறம் பாகிஸ்தான் அமைச்சரின் இந்தப் பேச்சு மத்திய கிழக்கு நாடுகளிடையே நிலவி வரும் பதற்றத்தை மேலும் சிக்கலாக்கியுள்ளது.
