டெல்லி ஜந்தர் மந்தரில் கல்வித்துறை அமைச்சரின் ராஜினாமாவை வலியுறுத்தி நடைபெற்ற ‘காக்ரோச் ஜனதா கட்சி’ (CJP) போராட்டத்தில் பங்கேற்ற உஜ்வல் சிங் என்ற 19 வயது மாணவர், சமூக வலைத்தளங்களில் தனது தோற்றம் மற்றும் பாலின அடையாளம் குறித்துத் தரம் தாழ்ந்த முறையில் பரப்பப்பட்டு வரும் அவதூறுகளுக்கு வீடியோ மூலம் மிக ஆக்ரோஷமாகப் பதிலடி கொடுத்துள்ளது தற்பொழுது இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
12-ஆம் வகுப்பு முடித்துவிட்டு சிஇயுடி (CUET) மற்றும் நீட் (NEET) தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகப் போராட வந்த உஜ்வல் சிங், அவர் அணிந்திருந்த டி-சர்ட்டில் இருந்த சில வாசகங்கள் காரணமாக இணையவாசிகளால் கொடூரமாக ட்ரோல் (Troll) செய்யப்பட்டு, தனிப்பட்ட முறையில் அசிங்கமான வார்த்தைகளால் விமர்சிக்கப்பட்டார்.
ये उज्जवल है, जो जंतर मंतर पर कॉकरोच जनता पार्टी के प्रोटेस्ट में पहुंचे थे.
ये खूब वायरल हैं, लोग सोशल मीडिया पर इन्हें खूब ट्रोल कर रहे हैं. जिसको लेकर उज्जवल ने अपना वीडियो जारी किया है. pic.twitter.com/YDwLvwaxZp
— Priya singh (@priyarajputlive) June 9, 2026
இதற்குத் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுப் பதிலளித்துள்ள உஜ்வல் சிங், 40 டிகிரி கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் மாணவர்களின் எதிர்காலத்திற்காகவும், கல்வி முறையைச் சீரமைக்கக் கோரியும் தான் போராட்டத்தில் கலந்து கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்;
ஆனால், அங்கு வந்த சில ஊடகங்களும் நெட்டிசன்களும் தேர்வு முறைகேடுகள், பேப்பர் லீக் மற்றும் அதனால் உயிரிழந்த 12 மாணவர்களின் மரணம் குறித்த முக்கியப் பிரச்சினைகளை விவாதிக்காமல், ‘நீ ஏன் இந்த உடை அணிந்திருக்கிறாய்?’, ‘உன் பாலினம் என்ன?’, ‘உன் பாலின ஈர்ப்பு என்ன?’ எனத் தனிப்பட்ட கேள்விகளைக் கேட்டு அசல் போராட்டத்தின் நோக்கத்தையே திட்டமிட்டுத் திசைதிருப்புவதாகக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தான் அணிந்திருந்த டி-சர்ட் தற்செயலாக அணிந்தது என்றும், மாற்றுப் பாலினத்தவர்களை (Queer Folks) இணையத்தில் மிக எளிதாக இலக்கு வைத்து அவதூறு பரப்புவதை விடுத்து, நாட்டின் கல்வி முறையை மாற்றவும் இளைஞர்களின் எதிர்காலத்தைக் காப்பாற்றவும் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என்றும் அவர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ள இந்த வீடியோ, தற்பொழுது நெட்டிசன்கள் மத்தியில் சோசியல் மீடியாவில் மிகப்பெரிய அளவில் வைரலாகி அசுர வேகத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
