தமிழகத்தில் தீபாவளி பண்டிகை வருகின்ற நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் பண்டிகை நாட்களில் சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 9 முதல் 11ஆம் தேதி வரை மூன்று நாட்கள் சென்னையில் இருந்து 10975 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. அதனைப் போலவே தீபாவளி முடிந்து சென்னை திரும்ப ஏதுவாக நவம்பர் 13ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.