கர்நாடக மாநிலம் பெங்களூரில், சாலையோரம் கட்டப்பட்டிருந்த பசு மாட்டிடம் வாலிபர் ஒருவர் தகாத முறையில் நடந்துகொண்ட அதிர்ச்சி சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூரு பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர், தனக்குச் சொந்தமான பசு மாட்டை வழக்கம்போல் அப்பகுதியில் உள்ள சாலையோரம் கட்டிப் போட்டிருந்தார்.
இந்த நிலையில், நள்ளிரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர், நடமாட்டம் ஏதேனும் உள்ளதா என்று சுற்றும் முற்றும் பார்த்துள்ளார். தெருவில் யாரும் இல்லை என்பதை உறுதி செய்துகொண்ட அந்த வாலிபர், யாரும் எதிர்பாராத விதமாக பசு மாட்டிடம் தகாத உறவில் ஈடுபட்டுள்ளார். பின்னர், தனது மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
இந்த முகம் சுளிக்க வைக்கும் ஒட்டுமொத்த சம்பவமும், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் (சிசிடிவி) மிகத் தெளிவாகப் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ காட்சிகளில், சம்பந்தப்பட்ட வாலிபரின் முகம் மற்றும் அவர் வந்த மோட்டார் சைக்கிளின் பதிவு எண் ஆகியவை துல்லியமாகத் தெரிகின்றன.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், பசு மாட்டின் உரிமையாளர் காட்டன்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆதாரமாக வீடியோ காட்சிகளும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இப்புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள காட்டன்பேட்டை போலீசார், தலைமறைவாக உள்ள அந்த வாலிபரைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மனிதநேயமற்ற இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
