சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு முதியவரின் காணொளி, பார்ப்பவர் நெஞ்சங்களை உருக வைப்பதாக அமைந்துள்ளது. அந்த வீடியோவில், உடல்நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்ட ஒரு வயதான ரிக்சா தொழிலாளி, கையில் சிறுநீர் பையை ஏந்தியபடி, வலியைப் பொருட்படுத்தாமல் ரிக்சா ஓட்டிப் பிழைப்பு நடத்தும் நெஞ்சை பிழியும் காட்சி இடம் பெற்றுள்ளது.

மேலும் இன்ஸ்டாகிராமில் பெண் உள்ளடக்க உருவாக்குநர் ஒருவர் பகிர்ந்துள்ள இந்த பதிவில், தான் ஒரு வாடகை காரை எதிர்பார்த்து காத்திருந்தபோது, இந்த முதியவர் மிகவும் மெதுவான குரலில் தன்னிடம் உதவி கேட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். அவர் கையில் இருந்த சிறுநீர் பையைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், அவரிடம் விசாரித்தபோது, “நான் மிகவும் உடல்நலம் குன்றி இருக்கிறேன் மகளே, ஆனால் வயிற்றுப் பிழைப்பிற்காகவும் குடும்பத்தைக் காப்பாற்றவும் வேறு வழியின்றி இந்த நிலையிலும் உழைக்கிறேன்” என்று அந்த முதியவர் கண்ணீருடன் தனது வறுமையையும் வாழ்க்கைப் போராட்டத்தையும் விவரித்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by JAZZ 🦋🧿 (@loveblushbyjazz)

“>

இவ்வளவு கடுமையான உடல் உபாதைகளும், சொல்லொணா வறுமையும் சூழ்ந்திருந்த போதிலும், அந்த முதியவர் தன் முகத்தில் எவ்வித புகாரும் இன்றி, “இறைவன் என்னோடு இருக்கிறார், அதுவே என் விதி” என்று புன்னகையுடன் கூறியது பலரையும் நெகிழச் செய்துள்ளது. இந்தச் சந்திப்பு தன் சொந்த வாழ்க்கைத் துயரங்களை மறக்கடித்து, தனக்குள்ளே ஒரு பெரிய மனவலிமையைத் தந்ததாக அந்தப் பெண் சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார்.

தற்போது அந்த முதியவருக்கு உதவும் நோக்கில், அவரது வங்கி கணக்கு விவரங்களை வெளியிட்டு தொண்டு நிறுவனங்களுக்கும் பொதுமக்களுக்கும் அந்தப் பெண் நிதியுதவி கோரி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த உருக்கமான காணொளியைக் கண்ட லட்சக்கணக்கான இணையவாசிகள், அந்தப் பெண்ணின் மனிதநேயப் பண்பைப் பாராட்டுவதோடு, முதியவருக்கு தங்களால் இயன்ற உதவிகளைச் செய்ய முன்வந்து வருகின்றனர்.