தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் சமீபத்தில் தனது அப்பாவின் பிறந்தநாளை கொண்டாட கேரளா சென்று இருந்த நடிகை நயன்தாரா தனது நண்பர்களுடன் நள்ளிரவில் சாலையில் காரை நிறுத்திவிட்டு ஐஸ்கிரீம் சாப்பிட்ட போது எடுத்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அந்த வீடியோவில் ஆண் நண்பர் ஒருவர் சாலையின் எதிரில் இருக்கும் கடையில் நயன்தாராவின் விளம்பர படத்தை பார்த்துக் கொண்டே அருகில் நின்று கொண்டிருக்கும் தோழியிடம் உனக்கு நயன்தாராவை பார்க்க வேண்டுமா என கேட்க, அருகிலேயே நயன்தாரா ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருப்பதை பார்க்கும் அந்த பெண் ஆச்சரியத்துடன் அவரை பார்த்து மேம் என்று ஓடி வருகிறார். இவர்கள் இருவரும் நயன்தாராவுடன் இணைந்து ஐஸ்கிரீம் சாப்பிட சென்றவர்கள். ஒரு ஜாலிக்காக அவர்கள் இப்படி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.