கர்நாடக மாநிலம் பெங்களூரு மாவட்டம் ஹோஸ்கோட் தாலுகா சுலிபெள்ளி கிராமத்தில், புதையல் கிடைக்கும் என்ற அதீத ஆசையில் ஒரு வயது ஆண் குழந்தையை நரபலி கொடுக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அக்கிராமத்தைச் சேர்ந்த சையது இம்ரான் மற்றும் அவரது மனைவி, சில மாதங்களுக்கு முன்பு புலம்பெயர் தொழிலாளி ஒருவரிடமிருந்து சட்டவிரோத ஒப்பந்தம் மற்றும் போலி பிறப்புச் சான்றிதழ் மூலம் ஒரு ஆண் குழந்தையை தத்தெடுத்த நிலையில், பவுர்ணமி தினம்  அந்த குழந்தையை பலியிட திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்ணுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், அதிகாரிகள் இம்ரானின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்; அப்போது அங்கு சடங்குகளுக்காக குழி தோண்டப்பட்டு, ஊதுபத்தி, மலர்களுடன் நரபலிக்குத் தயாராக இருந்த நிலையில் குழந்தையை மீட்ட அதிகாரிகள், இம்ரான் தம்பதியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதுடன்,

இச்சம்பவம் குறித்து சுலிபெள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.