சமீபத்தில் குருகிராமில் ராபிடோ ஓட்டுநர் ஒருவர் பெண் பயணியிடம் மிகவும் மோசமாக நடந்துகொண்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிசம்பர் 15-ம் தேதி இரவு நேரத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில், காரில் அதிக சத்தத்துடன் இசை ஒலித்ததை குறைக்குமாறு அந்தப் பெண் ஓட்டுநரிடம் கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஓட்டுநர், அந்தப் பெண்ணை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியதுடன், “இது உன் அப்பன் வீட்டு வண்டியா?” எனக் கேட்டு நள்ளிரவில் நடுக்கே ரோட்டில் இறக்கிவிட்டு மிரட்டியுள்ளார். இந்த அதிர்ச்சிகரமான அனுபவத்தை அந்தப் பெண் வீடியோவாகப் பகிர்ந்து கண்ணீர் மல்க நீதி கோரியது இணையவாசிகளை கொதிப்படையச் செய்துள்ளது.
View this post on Instagram
“>
மேலும் பாதிக்கப்பட்ட பெண் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றபோது, காவல்துறையினர் வழக்கைப்பதிவு செய்வதற்குப் பதிலாக சமரசம் செய்து செல்லுமாறு அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும் மனம் தளராத அந்தப் பெண், தனது குடும்பத்தினரின் உதவியுடன் மாவட்ட நீதிமன்றத்தை அணுகி ஓட்டுநர் மீது சட்டப்படி வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் சுமார் 1.5 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்ற இந்த வீடியோ, பெண்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் பலத்த கேள்விகளை எழுப்பியுள்ளது. இது போன்ற அநாகரிகமான ஓட்டுநர்கள் மீது ராபிடோ நிறுவனம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
