மத்திய அரசின் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ், தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை தலா 2,000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக (நான்கு மாதங்களுக்கு ஒருமுறை) விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது. இந்நிலையில், விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்கவும், இடுபொருள் செலவுகளைச் சமாளிக்கவும் இந்தத் தவணைத் தொகையை 2,000 ரூபாயிலிருந்து 4,000 ரூபாயாக உயர்த்த மத்திய அரசு ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது.
இந்த அதிரடி உயர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில் வெளியாக அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தத் தொகை உயர்த்தப்பட்டால், விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை 4,000 ரூபாய் வீதம், ஆண்டுக்கு மொத்தம் 12,000 ரூபாய் நிதி உதவி கிடைக்கும். இது நாட்டின் கோடிக்கணக்கான விவசாய குடும்பங்களுக்குப் பெரும் பொருளாதார ஆதரவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
