மறைமுகமாக உதவி செய்வதில் பெயர் போனவர் நடிகர் அஜித். தனக்கென ரசிகர் மன்றம் எதுவும் வேண்டாம் என சொன்னாலும் கூட இவருக்கு என மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கத்தான் செய்கிறது. இவரது ரசிகர்கள் இவரை அல்டிமேட் ஸ்டார் என்றும் AK என்றும் அழைக்கிறார்கள்.  இந்நிலையில் கிலாஸ்கோவில் இருந்து சென்னைக்கு 10 மாத கைக்குழந்தையுடன் தனியாக வந்த பெண்ணுக்கு உதவி செய்துள்ளார் நடிகர் அஜித்.

இரு கைகளிலும் லக்கேஜை வைத்து கஷ்டப்பட்ட அந்த பெண்ணிடமிருந்து, லக்கேஜை தூக்கி சென்றுள்ளார் அஜித். இதையடுத்து நடிகர் அஜித்திற்கு நன்றி தெரிவித்து அந்த பெண்ணின் கணவர் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து பலரும் அஜித்தின் செயலை பாராட்டி வருகின்றனர்.