பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சல்மான் கான். இவர் உயிருக்கு தற்போது ஆபத்து இருப்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதன் பிறகு அண்மையில் துப்பாக்கி குண்டு துளைக்காத விலை உயர்ந்த கார் ஒன்றையும் சல்மான் கான் வாங்கினார். நடிகர் சல்மான் கான் தற்போது பாலிவுட் சினிமாவில் வீரம் படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ள கிஸி கா பாய் கிஸி கா ஜான் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் சல்மான் கான் பற்றிய ஒரு விஷயத்தை தற்போது நடிகை பாலக் திவாரி கூறியுள்ளார்.

அதாவது சல்மான் கான் படப்பிடிப்பு தளத்தில் பெண்கள் அனைவரும் முழு உடலையும் மறைக்கும்படி தான் ஆடை அணிய வேண்டும் என அவர் கட்டுப்பாடு வைத்துள்ளாராம். லோ நெக் உடைகளை எல்லாம் கண்டிப்பாக பெண்கள் அணியக்கூடாது என சல்மான் கான் ஸ்ட்ரிட்டாக கூறியுள்ளாராம். மேலும் பெண்களின் ஆடை விஷயத்தில் சல்மான் கான் இப்படி ஒரு கட்டுப்பாடு போட்டுள்ளாரா என்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.