மத்தியப் பிரதேசத்தின் தலைநகர் போபாலில், அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் பள்ளி நேரத்தில் மாணவரால் கால் மசாஜ் செய்வது கேமராவில் பதிவாகி, சமூக ஊடகங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் காந்திநகர் பகுதியில் உள்ள அரசு மகாத்மா காந்தி மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடந்ததாக கூறப்படுகிறது. வீடியோவில், ஆசிரியை ஒரு நாற்காலியில் அமர்ந்து, காலை மற்றொரு நாற்காலியில் வைத்திருக்கும் நிலையில், 4ஆம் வகுப்பு மாணவர் அவரது பாதத்தை மசாஜ் செய்வது தெளிவாக காணப்படுகிறது. சம்பவம் வெளியானதைத் தொடர்ந்து, உள்ளூர் மக்கள் மற்றும் சமூக வலைதளப் பயனர்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தைப் பற்றிய விளக்கத்தில், குற்றச்சாட்டை மறுத்த ஆசிரியை, பள்ளி வாசலில் உடைந்த ஓடு குழியில் கால் வைத்ததால் காயமடைந்ததாகவும், மாணவர்கள் உதவி செய்து தன்னை நாற்காலியில் அமரவைத்ததாகவும் கூறினார். மேலும், ஒரு மாணவி பாசத்தால் தனது பாதத்தை மசாஜ் செய்து வலியை குறைக்க முயன்றதாகவும் அவர் விளக்கம் அளித்தார். ஆனால், இது ஆசிரியர்களின் நடத்தை தொடர்பான கேள்விகளை எழுப்பியுள்ளதாகவும், பள்ளியில் இத்தகைய செயல்கள் வழக்கமானவை அல்ல என்று சிலர் தெரிவித்துள்ளனர்.
#WATCH | #Bhopal: Govt School Teacher Gets Foot Massage From Student; Video Goes Viral#MPNews #MadhyaPradesh pic.twitter.com/LJ4JaddI4P
— Free Press Madhya Pradesh (@FreePressMP) August 10, 2025
“>
மாநில அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களின் நடத்தை, வகுப்பறை வசதிகள், பெஞ்சுகள் மற்றும் கழிப்பறைகள் போன்ற அடிப்படை உள்கட்டமைப்புகள் குறைவாக உள்ளதாக அடிக்கடி புகார்கள் எழுந்து வரும் நிலையில், இந்த சம்பவம் மீண்டும் கல்வித் துறையின் தரத்தையும், ஆசிரியர்களின் பொறுப்பையும் குறித்த விவாதங்களை தூண்டியுள்ளது. அதிகாரிகள் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
