மத்தியப் பிரதேசத்தின் சித்தி மாவட்டத்தில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம், அப்பகுதி மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

கஜுரிஹா கிராமத்தைச் சேர்ந்த பூஜா என்ற இளம் பெண், வீட்டில் உடை மாற்றிக் கொண்டிருந்தபோது விஷப்பாம்பு கடித்ததில் உயிரிழந்தார். தகவலின்படி, ம கஜுரிஹா கிராமத்தைச் சேர்ந்த பூஜா, ஒரு அழைப்பிதழ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகத் தயாராகிக் கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில், அவர் அலமாரியில் இருந்து ஆடைகளை எடுத்தபோது, துணிகளுக்குள் மறைந்து இருந்த விஷப்பாம்பு திடீரென அவரை கடித்தது. பாம்பு கடித்ததை உணர்ந்த பூஜா உடனடியாக குடும்பத்தினரிடம் தெரிவித்தார். இதையடுத்து, உறவினர்கள் அவரை  அவசரமாக சித்தி மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், விஷம் உடலுக்குள் விரைவாகப் பரவியதால், மருத்துவர்களின் தீவிர சிகிச்சையிலும் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.

இந்த சம்பவம் கிராம மக்கள் மத்தியில் பெரும் துயரத்தையும் பாம்பு தாக்குதலுக்கான அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வீட்டுக்குள் கூட பாம்பு புகுந்து இப்படிப்பட்ட துயரச் சம்பவம் நடந்தது மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. அப்பகுதியில் பாம்பு தொல்லையை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.