அயர்லாந்தைச் சேர்ந்த பிரபல யூடியூபராக இருக்கும் ‘தாரா தாஹ்’ (Dara Tah) என்பவர், பப்புவா நாட்டின் அடர்ந்த காடுகளில் வசித்து வரும் ஒரு ‘நரபழி ’ பழங்குடியினரை சந்திக்கச் சென்றார். உலகம் முன்னேறிக்கொண்டே இருக்கிறது என்றாலும், இன்னும் சில பழங்குடியினர் மனிதர்களை சாப்பிடும் பழக்கத்துடன் உயிர்வாழ்ந்து வருகின்றனர்.

இதற்கிடையில், அந்த பழங்குடியினரிடம் முதல் முறையாக உப்பை சுவைக்க வைக்கும் முயற்சியில், தாரா தாஹ்  பெரும் அதிர்ச்சியை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். அந்தக் காட்சி வீடியோவாக சமூக வலைதளங்களில் தீவிரமாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில், தாரா தாஹ் தனது பாக்கெட்டில் இருந்த உப்பை எடுத்துக் கொண்டு, அந்த பழங்குடியினரில் ஒருவரிடம் சுவைக்கக் கொடுக்கிறார். ஆனால், அவர் உப்பின் சுவையை விரும்பாமல் துப்பி விடுகிறார். இதனால் கோபமடைந்த பழங்குடியினர்கள், தாராவை நோக்கி தங்களது வில்-அம்புகளை தயாராக வைத்துள்ளனர். உயிரைப் பணையம் வைத்து அங்கிருந்து ஓடிய தாரா, “இந்த அனுபவம் என் வாழ்க்கையில் மிகவும் மரண பயமளிக்கும் சம்பவம் ” என பின்னர் பகிர்ந்துள்ளார்.

“>

இந்த வீடியோ வைரலான பிறகு, சமூக வலைதளங்களில் அவருக்கு கடுமையான விமர்சனங்களும் எழுந்தன. “இதை  தாண்டிய ஒரு அகந்தை – பழங்குடியினரிடம் மரியாதையுடன் நடந்து கொள்வது மிகவும் முக்கியம்,” என நெட்டிசன்கள் தெரிவிக்கின்றனர்.

பலரும், “இது  போன்று ரொம்பவே ஆபத்தான மற்றும் மரியாதையில்லாத சந்திப்புகள், அந்த யூடியூபருக்கும், பழங்குடியினருக்கும் கேடு தரக்கூடியவை” என பதிலளித்துள்ளனர். தற்போது தாரா தாஹ் YouTube-ல் 8.28 லட்சம் சப்ஸ்கிரைபர்களையும், TikTok-ல் 7.5 லட்சம் பின்தொடர்பவர்களையும் கொண்டிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.