தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் ஷாருக்கான் நடிப்பில் தற்போது ஜவான் திரைப்படம் உருவாகி வருகிறது. அட்லீ இயக்கம் இந்த திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் செப்டம்பர் 7ஆம் தேதி திரைப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் நேற்று வெளியிடப்பட்டது. இதற்காக திரைப்படத்தை பாராட்டி விக்னேஷ் சிவன் twitter பக்கத்தில் பாராட்டு செய்தி ஒன்றை வெளியிட்டார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக ஷாருக்கான் நயன்தாராவிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள் என குறிப்பிட்டு ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், நயன்தாரா அருமையானவர், ஆனால் இதை நான் யாரிடம் சொல்கிறேன், உங்களுக்கு முன்பே தெரியும், ஆனால் அவர் இப்போது நன்றாக அடிக்கவும் உதைக்கவும் கற்றுக் கொண்டுள்ளார், ஜாக்கிரதையாக இருங்கள் என்று ஷாருக்கான் குறிப்பிட்ட அந்த பதிவை பகிர்ந்துள்ளார். இந்த பதிவை தற்போது ரசிகர்கள் இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.