சமூக ஊடகங்களில் தற்போது வேகமாக பரவி வரும் ஒரு வீடியோ, நெட்டிசன்கள் மத்தியில் அதிர்ச்சியும், சிரிப்பும் கலந்த பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

இந்த வீடியோவில், ஒரு நபர் தனது வீட்டில் குளிர்சாதன பெட்டியை (Fridge) குளியலறையின் கதவாக மாற்றியிருப்பது காணப்படுகிறது. அவர் குளிர்சாதன பெட்டியின் பின்புற பாகத்தை வெட்டி, அதை சுவரில் பொருத்தி கதவாக உருவாக்கியிருக்கிறார். அந்த நபர் இதுபோன்ற வித்தியாசமான யோசனையை எப்படிச் சிந்தித்தார் என்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Sarcastic Joker | Raj Jain (@sarcastic.joker)

“>

இந்த வீடியோவை Instagram பக்கத்தில் “sarcastic.joker” என்ற கணக்கு வெளியிட்டுள்ளது. “அவன் ஹேக்கர் சார்!” என்ற தலைப்பில் பதிவான இந்த வீடியோக்கு ஆயிரக்கணக்கான லைக்குகள் கிடைத்துள்ளன. வீடியோவில், ஒருவர் குளிர்சாதன பெட்டியின் கதவை திறப்பது போல செய்து, பின்னால் ஒரு முழு குளியலறை கதவாக அதை பயன்படுத்தும் காட்சி அடங்கியுள்ளது.

இது ஒரு சாதாரண ஐடியா அல்ல, புத்திசாலித்தனமாக சிந்திக்கப்பட்ட பகிரங்கமான தொழில்நுட்ப நுண்ணறிவு என நெட்டிசன்கள் புகழ்ந்துள்ளனர்.