சமூக வலைதளத்தில் வெளியான காணொளி ஒன்று குழந்தைகளின் கள்ளக் கபடம் அற்ற அன்பை வெளிப்படுத்தியுள்ளது ஒன்றரை அல்லது இரண்டு வயது இருக்கும் குழந்தை வீட்டில் பூஜை அறையில் இருந்த ஹனுமான் சிலையை எடுத்து ஓடுகிறான். அவனது அம்மா பின்னால் துரத்துகிறாள், ஆனால் பையன் ஹனுமானை விடாமல் தன் தோளில் சுமந்து வீட்டில் உலா வருகிறான். இந்தக் குறும்பில் ஹனுமானுக்கு “காயம்” ஏற்பட்டதாக அம்மா சொல்ல, பையன் உடனே அம்மாவின் பாடி லோஷனை எடுத்து வந்து ஹனுமானுக்கு தடவி, பாசத்துடன் முத்தமும் கொடுக்கிறான். இந்த அழகான, வேடிக்கையான காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி, பார்ப்பவர்களை சிரிக்க வைக்கிறது.

இந்த வீடியோவைப் பார்த்து மக்கள் வயிறு குலுங்க சிரித்து, பலரும் வேடிக்கையான கருத்துகளை பகிர்ந்துள்ளனர். ஒருவர், “ஹனுமான் நினைப்பார், நான் என் அம்மா அஞ்சனையை இவ்வளவு தொந்தரவு செய்யவில்லை” என்று எழுத, மற்றொருவர், “நான் மலை தூக்கினேன், இவன் என்னையே தூக்கிவிட்டான்” என்று கமெண்ட் செய்தார். “ஹனுமானை கடத்திய பையன்” என்று ஒருவர் கலாய்க்க, “குழந்தைகள் மனம் தூய்மையானவை” என்று மற்றொருவர் பாராட்டினார். “ஜெய் ஹனுமான்” என்று எழுதியவர்களும் உண்டு. இந்த வீடியோ குழந்தையின் அப்பாவித்தனத்தால் அனைவரையும் கவர்ந்து, சிரிப்பும் மகிழ்ச்சியும் தருகிறது.