இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நடைபெற்ற நிலையில், அதில் தென்னாப்பிரிக்காவின் இளம் வீரர் டெவால்டு பிரெவிஸ் பிடித்த நம்ப முடியாத கேட்ச் கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டாஸ் வென்று முதலில் பந்துவீசிய தென்னாப்பிரிக்கா அணியில், இந்திய வீரர் ருதுராஜ் கெய்க்வாட் (8 ரன்கள்) அடித்த பந்தை பிரெவிஸ் ‘பாயிண்ட்’ திசையில் பாய்ந்து, ஒரு கையால் அபாரமாகக் கேட்ச் பிடித்தார். ஐபிஎல்-லில் ருதுராஜின் சிஎஸ்கே அணியில் விளையாடிய பிரெவிஸ் அவரை அவுட்டாக்கியது சுவாரஸ்யமானது.

“>

 

பிரெவிஸ் பிடித்த இந்த அதிசயக் கேட்சைப் பார்த்து நான்-ஸ்ட்ரைக்கர் முனையில் நின்று கொண்டிருந்த விராட் கோலி, வாயைத் திறந்து தனது அதிர்ச்சியை வெளிப்படுத்திய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

“>