காட்டின் இயற்கை போர்க்களத்தில் விலங்குகளுக்கிடையேயான சண்டைகள் எப்போதும் அதிர்ச்சியும், சாகசமும் கலந்தவை. ஆனால் சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளி, இதனை நம்பமுடியாத அளவுக்கு உறுதிப்படுத்துகிறது.
இந்த வீடியோவில், ஆற்றங்கரையில் ஒரு பெரிய மலைப்பாம்பும், ஒரு முதலையும் ஒன்றையொன்று தாக்கிக் கொள்கிற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஆரம்பத்தில், முதலைதான் மேலோங்கி இருப்பது போல் தோன்றுகிறது. ஆனால் அதன்பின் நடந்த காட்சிகள் பார்வையாளர்களை அதிர்ச்சியடையவைத்துள்ளது.
வீடியோவில், முதலில் முதலை மலைப்பாம்பை கடிக்க முயல்கிறது. அதன்பின், தப்பிச்சென்ற பாம்பு பழிவாங்கும் முயற்சியாக,திரும்பி வந்து முதலைக்கு எதிராகச் செயல்படுகிறது. தன் சுறுசுறுப்பான உடலமைப்பையும், பிடிப்பையும் பயன்படுத்தி, மலைப்பாம்பு முதலையை முற்றிலும் கட்டுப்படுத்துகிறது. கடைசியாக, அந்த மலைப்பாம்பு வெற்றி பெறும் படி காட்சி முடிவடைகிறது. பார்வையாளர்கள், “முதலை தோற்றதா?”, “மலைப்பாம்புதான் காட்டின் உண்மையான அரசனா?” என விவாதம் மேற்கொள்கின்றனர்.
— Wildlife Uncensored (@TheeDarkCircle) September 5, 2025
இந்த வைரல் வீடியோவை @TheeDarkCircle என்ற ஐடியிலிருந்து சமூக ஊடக தளமான “X” இல் பகிரப்பட்டுள்ளது. வெறும் 13 வினாடிகள் நீளமுள்ள இந்த வீடியோ, இதுவரை 4 லட்சத்திற்கும் அதிகமான முறை பார்வையிடப்பட்டுள்ளதுடன், நூற்றுக்கணக்கான பேர் இதை விரும்பியும், தங்களது கருத்துக்களையும் பகிர்ந்துள்ளனர். ஒரு பயனர், “இது ஹாலிவுட் படத்தைவிட வலிமையானது” எனக் குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர், “இது நேஷனல் ஜியோகிராஃபிக் டாக்குமென்டரிக்கே நிகர்!” என பதிவிட்டுள்ளார். “இது காட்டின் உண்மையான எஜமானர் யார் என்பதை எடுத்துக்காட்டுகிறது” என்றும் பலர் பதிவிட்டுள்ளனர்.
