சமீபகாலமாக வினோத விலங்குகளின் வருகையால் அந்தமான் தீவுகள் செய்திகளில் இடம்பிடித்து வரும் நிலையில், தற்போது ஒரு குட்டிப் பறவை செய்த சாதனையைப் பார்த்து உலகமே வியந்து போயுள்ளது.

ஏற்கனவே பெங்குவின் மற்றும் பஞ்ச் குரங்குகள் அந்தமானில் தென்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள், தெற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து சுமார் 7,400 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் இடைவிடாது பறந்து வந்த ஒற்றை கடற்பறவை அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் தஞ்சம் புகுந்துள்ளது.

உணவு மற்றும் இனப்பெருக்கத்திற்காக மேற்கொள்ளப்படும் ‘வலசை போதல்’ (Migration) நிகழ்வின் ஒரு பகுதியாக, இவ்வளவு நீண்ட தூரத்தைக் கடந்து இந்தச் சிறிய பறவை இந்தியா வந்து சேர்ந்துள்ளது.

அதன் கால்களில் கட்டப்பட்டுள்ள அடையாள வளையத்தை வைத்து, இது ஆஸ்திரேலியாவிலிருந்து வந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வளவு சிறிய உயிரினம் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்களைக் கடந்து வந்திருப்பது இயற்கை ஆர்வலர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.