புதுச்சேரியில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலம் லாஸ்பேட்டை முல்லை நகரை சேர்ந்த பி.டெக் பட்டதாரியான கிஷோர் என்ற 23 வயது இளைஞர் வெளிநாடு செல்ல திட்டமிட்டு இருந்த நிலையில் இன்று காலை தன்னுடைய நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது அவர் திடீரென்று மயங்கி கீழே விழுந்த நிலையில் உடனே நண்பர்கள் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். கிஷோர் லேசான இதய பாதிப்பு காரணமாக மாத்திரைகள் எடுத்து வந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில் இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.