உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள தாக்கூர் பகுதியில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவனை அவனது நண்பனின் அண்ணியே பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி, அந்த மாணவனை நைனிடாலுக்கு ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்ற அந்தப் பெண், அங்குள்ள ஒரு ஹோட்டலில் வைத்து மாணவனைத் தனது ஆசைக்கு இணங்க வைத்துள்ளார்.
அதுமட்டுமன்றி, மாணவனுக்குத் தெரியாமலேயே அவனது ஆபாசப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் எடுத்துள்ளார். மாணவன் மாயமானதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் தேடி வந்த நிலையில், மாணவன் மீட்கப்பட்டான்.
வீட்டிற்கு வந்த பிறகு மாணவன் யாரிடமும் பேசாமல் அழுதுகொண்டே இருந்ததால் சந்தேகமடைந்த பெற்றோர் அவனிடம் விசாரித்தபோது, அந்தப் பெண் செய்த கொடூரங்கள் அம்பலமானது.
மேலும், அந்த வீடியோக்களை வைத்து மாணவனின் குடும்பத்தினரிடம் 10 லட்சம் ரூபாய் கேட்டு அந்தப் பெண் மிரட்டியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, அந்தப் பெண்ணைக் கைது செய்த போலீசார், அவரிடமிருந்த வீடியோக்களைப் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிச் சிறுவர்களுக்கு எதிரான இதுபோன்ற பாலியல் குற்றங்கள் சமூகத்தில் ஒரு எச்சரிக்கை மணியாகப் பார்க்கப்படுகிறது.
