இந்தியாவின் கிராமப்புறங்களில் சைக்கிள் பயணம் மேற்கொண்ட டங்கன் எவன்ஸ் என்ற பிரிட்டிஷ் பயணிக்கு நேர்ந்த நெகிழ்ச்சியான அனுபவம் இப்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. கொளுத்தும் கோடையில் விவசாய நிலங்களுக்கு இடையே டங்கன் சைக்கிளில் சென்றபோது, அவரை வழிமறித்த ஒரு முதியவர், அன்போடு நலம் விசாரித்து தனது வீட்டிற்கு மோர் குடிக்க அழைத்துள்ளார்.
அந்த அன்பான அழைப்பை ஏற்று அவர் வீட்டிற்குச் சென்றபோது, முதியவர் அவரை ஒரு ‘கயிற்றுக்கட்டிலில்’ அமரவைத்து, கைப்படத் தயாரித்த ஃப்ரெஷ் மோர் கொடுத்து உபசரித்துள்ளார்.
View this post on Instagram
சுட்டெரிக்கும் வெயிலில் தாகத்துடன் வந்த ஒரு அந்நியரை, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு பெரியவர் தன் வீட்டிற்கு அழைத்து உபசரித்த விதம் டங்கனை உறைய வைத்துள்ளது.
“நான் சந்தித்ததிலேயே மிகச்சிறந்த மனிதர் இவர்தான்” என டங்கன் பதிவிட்ட இந்த வீடியோவை இதுவரை 1.1 கோடிக்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர்.
விருந்தினரைத் தெய்வமாகக் கருதும் இந்திய கிராமப்புற கலாச்சாரத்தையும், கௌரவம் பார்க்காமல் கீழே அமர்ந்து விருந்தினருக்குக் கட்டிலில் இடம் கொடுத்த அந்தப் பெரியவரின் எளிமையையும் உலகெங்கிலும் உள்ள மக்கள் பாராட்டி வருகின்றனர்.
