ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில், இனவெறி காரணமாக இந்திய மாணவர் ஒருவர் மீது வன்முறை தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.
23 வயதான சரண்ப்ரீத் சிங் தனது மனைவியுடன் ஜூலை 19ஆம் தேதி இரவு கிந்தோர் அவென்யூ அருகே வாகனத்தில் நின்று ஓளி காட்சிகளை பார்ப்பதற்காக வந்திருந்தார். அப்போது ஐந்து பேர் கொண்ட குழுவினர் வாகனத்தில் இருந்து இறங்கி, தாக்குதலில் ஈடுபட்டனர். “இந்தியனே கிளம்பு” என்ற வகையில் இனவெறி வார்த்தைகளை கூறி, இரும்பு கம்பிகள் போன்ற ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதலின் போது சரண்ப்ரீத் சிங் பலத்த காயமடைந்ததால், அவசரமாக ராயல் அடிலெய்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு முகத்தில் எலும்பு முறிவுகள், மூளை அதிர்ச்சி எனக் கூறப்படுகிறது. சம்பவத்தையடுத்து போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இந்த தாக்குதலின் சம்பவம் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டதால், பொதுமக்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
✨Indian #student Charanpreet Singh brutally #attacked in Adelaide by 5 men shouting #racial slurs. 🚨Hospitalised after unprovoked #assault near #Kintore Ave. 👮Police took statements but no charges yet. 🆘#TheIndianSun
🔗 https://t.co/BXZQ93X6Vy pic.twitter.com/tO5ExzWNpf
— The Indian Sun (@The_Indian_Sun) July 19, 2025
“>
தெற்கு ஆஸ்திரேலிய முதல்வர் பீட்டர் மாலினாஸ்காஸ் இந்த தாக்குதலை கடுமையாக கண்டித்து, “எங்கள் மாநிலத்தில் இனவெறிக்கும் இடமில்லை” என தெரிவித்துள்ளார். தற்போது ஒருவரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மீதமுள்ள தாக்குதல் நடத்தியவர்களை தேடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம், ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டு மாணவர்களின் பாதுகாப்பு குறித்து கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.
