உலக கிரிக்கெட் வரலாற்றின் ஜாம்பவானும், ‘கிரிக்கெட்டின் கடவுள்’ என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவருமான சச்சின் டெண்டுல்கர், நடுவானில் பறக்கும் விமானத்தில் தனது மகளுடன் கிரிக்கெட் விளையாடிய சுவாரசியமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சச்சின் டெண்டுல்கர் எங்கு சென்றாலும் கிரிக்கெட் மீதான அவரது காதல் குறைவதே இல்லை என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சியாக அமைந்துள்ளது.

​சமீபத்தில் தனது மகளுடன் விமானத்தில் பயணம் மேற்கொண்ட சச்சின், நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது, ஜாலியாகத் தனது மகளுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடியுள்ளார். இந்த மிக அழகான மற்றும் கியூட்டான தருணங்களைத் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் சச்சின் டெண்டுல்கர் வீடியோவாகப் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள், “மாஸ்டர் பிளாஸ்டருக்கு கிரிக்கெட் விளையாட இடமே தேவையில்லை போல” என்று கமெண்ட் செய்து, அந்த வீடியோவை இணையத்தில் மின்னல் வேகத்தில் வைரலாக்கி வருகின்றனர்.