அமெரிக்காவில் சுமார் 20 மணிநேரம் இடைவிடாமல் வேலை செய்த நபர் ஒருவர், களைப்பு மிகுதியால் வாகனம் ஓட்டும்போதே தூங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெடுஞ்சாலையில் கார் தாறுமாறாகச் செல்வதைக் கண்ட அங்கிருந்தவர்கள் காவல்துறைக்குத் தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், ஓட்டுநர் சுயநினைவின்றி இருப்பதையும் கார் தானியங்கி முறையில் இயங்கிக் கொண்டிருப்பதையும் கவனித்தனர். அந்த நபர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால், காரை நிறுத்த காவல்துறை அதிகாரிகள் எனும் உத்தியைக் கையாண்டு, தங்கள் வாகனத்தால் காரை மோதி லாவகமாக ஓரம் கட்டி நிறுத்தினர்.

“>

இந்த விபத்தில் யாருக்கும் பெரும் காயம் ஏற்படவில்லை என்றாலும், தூக்கமின்மையால் வாகனம் ஓட்டுவது எவ்வளவு ஆபத்தானது என்பதை இந்த நிகழ்வு மீண்டும் ஒருமுறை உலகுக்கு உணர்த்தியுள்ளது. தொடர்ந்து 20 மணிநேரம் உழைத்ததால் ஏற்பட்ட அதீத சோர்வே இந்த நிலைக்குக் காரணம் என்று விசாரணையில் தெரியவந்தது.

தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், ஓட்டுநர்கள் போதுமான ஓய்வு எடுத்த பின்னரே வாகனங்களை இயக்க வேண்டும் எனப் போக்குவரத்துப் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ‘வேலையை விட உயிர் மேலானது’ என்ற கருத்தை வலியுறுத்தும் விதமாக இச்சம்பவம் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.