இந்தச் சம்பவம் நெஞ்சை உலுக்கும் அதே வேளையில், தாய்ப்பாசத்தின் உன்னதத்தை உலகிற்குப் பறைசாற்றுகிறது. ஒரு நான்கு வயது சிறுமி எதிர்பாராதவிதமாக ஆழ்கடலில் விழுந்ததைக் கண்ட தாய், ஒரு நொடி கூட யோசிக்காமல் தன் உயிரைப் பணையம் வைத்து கடலில் குதித்தார்.

மேலும் அலைகளின் சீற்றம் அதிகமாக இருந்தபோதிலும், தன் மகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில் அந்தத் தாய் போராடிய விதம் காண்போரை வியக்க வைத்தது. எவ்விதப் பயிற்சியும் இல்லாத சூழலில், ஒரு சாதாரணப் பெண் தன் குழந்தையை மீட்பதற்காக வெளிப்படுத்திய அந்த அபாரத் துணிச்சல் அங்குள்ளவர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

 

View this post on Instagram

 

A post shared by EYEWITNESS NEWS BAHAMAS (@ewnews)

“>

இறுதியில், கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மகளைத் தாய் பத்திரமாக மீட்டெடுத்தார். அருகில் இருந்தவர்கள் உதவியுடன் இருவரும் கரைக்குக் கொண்டு வரப்பட்டனர். இக்கட்டான சூழ்நிலையிலும் பதற்றமடையாமல், மரணத்தின் விளிம்பிலிருந்து தன் பிள்ளையை மீட்டெடுத்த தாய்.

அந்தத் தாயின் வீரச்செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. “கடவுளால் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது என்பதால் தான் தாயைப் படைத்தார்” என்பதற்கு இந்த நெகிழ்ச்சியான சம்பவம் ஒரு சிறந்த சான்றாக அமைந்துள்ளது.