ஹைதராபாத்தை சேர்ந்தவர் 25 வயது உமேஷ்.  கிருஷ்ணரெட்டி கிராமத்தைச் சேர்ந்த இவரை ஞாயிற்றுக்கிழமையன்று இரண்டு பேர் கத்தியால் கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளார்கள். இந்த அதிர்ச்சிகரமான சம்பவம், தேசிய நெடுஞ்சாலையில் நடு வெளியில் நடந்ததால், அருகில் சென்ற வாகன ஓட்டிகள் இதை பார்த்து அதிர்ந்துபோயுள்ளார்கள். இந்த கொடூரமான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து, தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இப்பகுதியின் சிசிடிவி காட்சிகளில், கொலையாளிகள் இருவரும் மிக அமைதியாக தெருவை கடந்துச் செல்வதும், சம்பவ இடத்தை விட்டுப் போவதும் பதிவாகியுள்ளது.  மேலும் சம்பவம் என்ன காரணத்திற்காக நடந்தது என்பது குறித்து போலீசார் விசாரணைக்கு பின்னர் தான் தெரிய வரும்.