உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள காஜியாபாத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நடுரோட்டில் அமர்ந்திருந்தார். அச்சமயம் அவ்வழியாக  வந்த கார் ஒன்று அவரை கவனிக்காமல் அவர் மீது மோதிவிட்டு சென்றுள்ளது. அப்போது  எதிரே காரில் வந்தவர்கள் நடு ரோட்டில் அமர்ந்திருந்த நபரை வீடியோ எடுத்துக் கொண்டிருந்ததால் திடீரென வந்து மோதிய காரும் அதில் பதிவாகியுள்ளது. விபத்துக்கு பிறகு அந்தக் காரையும் வீடியோவில் பதிவு செய்துள்ளனர்.

அதில் பாஜக கொடியும் பாஜக  எம்எல்ஏ பிரதிநிதி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து காஜியாபாத் கமிஷனர் அலுவலகம் சார்பாக காணொளி ஒன்று ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், “சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வரும் காணொளி விபத்தாக நடந்தது. இது குறித்து காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டு கார் பறிமுதல் செய்யப்பட்டு ஓட்டுனரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விபத்தில் உயிரிழந்த  நபர் யார் என்பது பற்றி இதுவரை அடையாளம் காணப்படவில்லை” என கூறியுள்ளனர்.

https://twitter.com/aditytiwarilive/status/1681534532137390082